இலங்கை அதிபராகிறாரா அனுரா குமார திச நாயக்க

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையில்  நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திச நாயகே அந்நாட்டின் 9வது அதிபராகிறார்.
 
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவாக 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்ற வாக்குபதிவில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார். அவர் 60.83 சதவீத வாக்குகளை  பெற்றுள்ள நிலையில் இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 21.06 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய வன்முறையைத் தடுக்கும் விதமாக இலங்கையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day