இலங்கை: வானில் பறந்த போது மோதிக்கொண்ட பாராசூட்கள் - 4 ராணுவ வீரர்கள் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான ஒத்திகையின் போது ராணுவத்தை சேர்ந்த நான்கு பாராசூட் சாகச வீரர்கள் படுகாயம் அடைந்தனர். வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இலங்கை சுதந்திர விழா கொண்டாப்பட உள்ளதை முன்னிட்டு காலி முகத்திடல் மைதானத்தில் விமானப்படை மற்றும் ராணுவ வீரர்களின் ஒத்திகை நடைபெற்றது. அப்போது பாராகிளைடிங்கில் பறந்து ராணுவ வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் எதிர்பாராத விதமாக இரு பாராசூட்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் பாராசூட்கள் செயலிழந்து கீழே இருந்த கட்டடத்தின் மீது விழுந்ததால் நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

varient
Night
Day