இஸ்மாயில் ஹனியாவைத் தொடர்ந்து முகமது தெய்ஃப் கொலை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது தெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் தலைவர்களைக் கொல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்திருந்தது. அந்தவகையில், ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை நேற்று முன்தினம் ஏவுகணைத் தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் கொன்றது. இந்தநிலையில் அடுத்தபடியாக தற்போது ஹமாஸ் ராணுவ தலைவர் முகமது தெய்ஃப் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியா இறுதி ஊர்வலத்துக்காக தெஹ்ரானில் மக்கள் திரண்டிருக்கும் இந்த நேரத்தில் தெய்ஃப்பும் கொல்லப்பட்டார் என்ற செய்தியை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day