இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்தால்தான் ரம்ஜான் : ஹமாசுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பணயக் கைதிகளை ரம்ஜானுக்குள் விடுவிக்காவிட்டால், பாலஸ்தீனத்தின் அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய இஸ்ரேல் போர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஜெனரல் பெனி காண்ட்ஸ், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு 3 வாரங்கள் காலக்கெடு விதிப்பதாகவும், அதற்குள் இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரும் அவரவர் வீடுகளில் இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்தால் மட்டுமே பாலஸ்தீனியர்கள் ரம்ஜான் பண்டிகையை நிம்மதியாக கொண்டாட முடியும் எனவும், இந்த வாய்ப்பை ஹமாஸ் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், 13 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ள ரஃபா நகரில் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் சார்பாக அவர் எச்சரிக்கை விடுத்தார். 

varient
Night
Day