இஸ்ரேலைச் சேர்ந்த மேலும் 6 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலை சேர்ந்த மேலும் 6 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக ஹமாஸ் படையினர் தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது. இந்நிலையில், மேலும் 6 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

varient
Night
Day