இஸ்ரேல் தாக்குதல் நடத்த அண்டை நாடுகள் உதவினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் - ஈரான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உதவினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று, அண்டை நாடுகளுக்கும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையேயான மோதலில், ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஈரான் கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக, தங்கள் நாட்டின் பகுதிகளையோ அல்லது வான் பகுதியையோ இஸ்ரேலுக்கு கொடுத்து உதவினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அண்டை நாடுகளுக்கும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் எச்சரித்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், ஜோர்டான், கத்தார் ஆகிய நாடுகளுக்கு ரகசிய சேனல்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.


Night
Day