இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலி - 155 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசாவில் நிவாரணப் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கும் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காததால் பசி பட்டினியால் வாடுகின்றனர். இந்நிலையில், வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். மேலும் 155க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day