இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மத்திய காசாவில் 5 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்தனர். 

கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெய்ர் அல் பலாஹ் பகுதியில் முன்பு 'ஷுஹாதா அல்-அக்ஸா' மசூதியாக செயல்பட்ட ஒரு கட்டமைப்பில்  கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் படையினர் மீது துல்லியமான தாக்குதலை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் காசா மசூதி மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் வஃபா தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் அடுத்தடுத்த ராணுவத் தாக்குதலில் சுமார் 42 ஆயிரம்  பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day