இஸ்ரேல் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடியதை திணிக்‍கவேண்டாம் - இஸ்ரேல் பிரதமர் பதில்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய எந்த நிலைப்பாட்டையும் எங்கள் மீது திணிக்க முயல வேண்டாம் என்று அமெரிக்‍காவிடம் இஸ்ரேல் பிரதமர் ​நெதன்யாகு கூறியுள்ளார்.  கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் 100 நாட்களை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தியும் இஸ்ரேல் அதனை புறக்‍கணித்துள்ளது. இந்தநிலையில், சில தினங்களுக்கு முன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்து சிக்கலை தீர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர், இஸ்ரேலின் எதிர்காலம் என்பது தனி பாலஸ்தீனத்திற்கு எதிரானதுதான் என்றார். 

Night
Day