இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவாவ் கலான்டு அதிரடி நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவாவ் கலான்டை அந்தப் பதவியில் இருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக நீக்‍கியுள்ளார்.  

புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நியமிக்‍கப்பட்டுள்ளார். காஸாவுக்‍கு எதிரான போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்‍கும், அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவாவ் கலான்டைக்‍கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில்,  கலான்ட் அதிரடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்‍கப்பட்டுள்ளார். காஸா போரை கையாளும் விதத்தில் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததே பதவி நீக்‍கத்துக்‍கு காரணம் என தெரியவந்துள்ளது. 

varient
Night
Day