இஸ்ரேல் பிரதமர் இல்லத்தில் டிரோன் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தை நோக்கி ஹிஸ்புல்லா  அமைப்பு ஏவிய ஆளில்லா விமானம் இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டரை கடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. காசாவின் ர ஃபா நகரில்  இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசேரியாவில் உள்ள பிரதமர் நெதன்யாகு வீட்டை குறி வைத்து ஹிஸ்புல்லா ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றாலும் இது இஸ்ரேலின் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஹிஸ்புல்லா ட்ரோன் இஸ்ரேல் ஹெலிகாப்டரை கடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Night
Day