இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவின் ஆற்றல் தகவல் ஆணைய தரவுகளின்படி, உலகின் 7வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக ஈரான் உள்ளது. ஓபெக் எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் 3வது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராகவும் ஈரான் இருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்றிரவு தாக்குதல் நடத்தியது. ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியவுடன், மேற்கத்திய நாடுகளின் எண்ணை சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, இந்திய மதிப்பின்படி, பேரல் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 247 ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகமுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

Night
Day