இஸ்ரேல் மீது முதன்முதலாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது முதல் முதலாக பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகப் பேசியுள்ள ஹவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா, வெறும் பதினொன்றரை நிமிடங்களில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை 2 ஆயிரத்து 40 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து இலக்கைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7 நடவடிக்கையின் முதல் ஆண்டு நிறைவை நெருங்கும் நிலையில் மேலும் அதிக தாக்குதல்களை இஸ்ரேல் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதுமில்லை எனக் கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடும் விலை கொடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Night
Day