இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையே 6 மாதங்களாக தொடரும் தாக்‍குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலஸ்தீனத்துக்கு எதிரான போரில் இதுவரை 600 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்‍டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர்கள் மீது கொடூர தாக்‍குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினரிடையே போர் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 600 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்‍குதலில் இதுவரை 32 ஆயிரத்து 782 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 139​பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

Night
Day