ஈக்‍வடார் முன்னாள் துணை அதிபர் கைது - தூதரக உறவை முறித்துக் கொண்ட மெக்சிகோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தங்கள் நாட்டு தூதரகத்தை சுற்றி வளைத்து ஈக்‍வடார் முன்னாள் துணை அதிபரை கைது செய்ததை கண்டித்து அந்நாட்டுடனான தூதரக உறவை மெக்சிகோ முறித்துக் கொண்டுள்ளது. 


ஈக்வடார் முன்னாள் துணை அதிபர் ஜார்ஜ் கிளாஸ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ஈக்வடாரின் கிட்டோ நகரில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஜார்ஜ் கிளாஸ், தனக்கு அரசியல் தஞ்சம் வழங்கும்படி கோரிக்கை விடுத்து இருந்தார். அங்கேயே அவர் தங்கி இருந்தார். இதனிடையே மெக்சிகோ தூதரகத்தை ஈக்வடார் போலீசார் சுற்றி வளைத்து தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைந்து, ஜார்ஜ் கிளாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட ஜார்ஜ் கிளாசை கைது செய்த ஈக்வடாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட மெக்சிகோ முடிவு செய்துள்ளது.

Night
Day