ஈரான் துறைமுக வெடி விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 800க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ரஜேயி துறைமுகத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து தற்போது 40ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து ஏவுகணை உந்து சக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் வெடித்ததால் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  

Night
Day