ஈரான் நாட்டு பெண்ணுக்‍கு சிறைத்தண்டனை நீட்​டிப்புக்‍கு கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, சிறையில் இருக்கும் ஈரான் நாட்டு  பெண்ணிற்கு அந்நாட்டு அரசு  மேலும்  கூடுதலாக  15 மாதம் சிறைத் தண்டனையை நீட்டித்துள்ளதற்கு  பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானை சேர்ந்த 51 வயதாகும் நர்கீஸ் முகமதி என்ற பெண் அந்நாட்டில் உள்ள பெண்களின் உரிமைக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுத்ததால், ஈரான் அரசு, அவருக்‍கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. இந்தநிலையில் தற்போது வரை 12 ஆண்டுகளைச் சிறையில் கழித்துள்ள நர்கீஸ் முகமதிக்கு மீண்டும் 15 மாதங்கள் சிறைத்தண்டனை கொடுத்துள்ளது ஈரான் அரசு. சிறையில் இருக்கும் அவர் மதக்கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக இந்த புதிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Night
Day