ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் இறையாண்மைக்கு எதிரானது -பாகிஸ்தான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் இறையாண்மைக்கு எதிரானது என பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கு உலக நாடுகள் தரப்பில் இருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்துவரும் சூழலில், பாகிஸ்தானும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், இஸ்ரேலின் இந்த ராணுவத் தாக்குதல் ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல் என குற்றம்சாட்டியுள்ளது. 

Night
Day