ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் இருப்பதால் பதற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலைத் தொடங்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள தங்களது துணைத் தூதரகத்தின் கடந்த 1-ம் தேதி தாக்குதல் நடத்தி உயர்மட்ட ஜெனரல் மற்றும் ஆறு ராணுவ அதிகாரிகளைக் கொன்றதற்குப் இஸ்ரேலை பழி தீர்ப்பது உறுதி என ஈரான் அறிவித்தது. இதையடுத்து இஸ்ரேல் மீதான உடனடி தாக்குதலின் அபாயத்தை ஒப்புக் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இதனிடையே ஈரானின் தூதரகம் மீது தாங்கள்தான் தாக்கியதாக இஸ்ரேல் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day