உகாண்டாவில் வேகமாக பரவும் டிங்கா, டிங்கா வைரசால் 300 பேர் பாதிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உகாண்டா நாட்டில் புதுவிதமான டிங்கா டிங்கா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் `டிங்கா டிங்கா' எனப்படும் மர்ம வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரஸ், பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து தாக்குவதாகவும்,  உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் போன்றவை நோயாளிகளுக்‍கு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எழுந்து நடப்பது கூட இயலாததுடன் தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நோயால் இதுவரை யாரும் உயிரிழக்‍கவில்லை என்றும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Night
Day