உக்ரனுக்கு 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தீவிரமடைந்தது. ரஷ்யாவின் தாக்குதலை சமாளிப்பதற்கான போதிய ஆயுதங்கள் இல்லாமல் உக்ரைன் திணறி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கி வரும் நிலையில், எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்கள், அமெரிக்காவின் உதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள போர் ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

Night
Day