உக்ரைனுக்கு துணையாக இந்தியா நிற்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனுக்கு துணையாக இந்தியா நிற்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து சுமார் 10 மணி நேரம் ரயில் பயணம் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றடைந்தார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் கீவ்வில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு சென்ற பிரதமர் மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆரத்தழுவி வரவேற்றார். அங்கு இரு நாட்டு தலைவைர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சுமார் 3 மணி நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதில் மற்ற நாடுகளைவிட இந்தியா 2 அடி முன்னால் இருப்பதாகவும், போரில் உயிரிழந்த குழந்தைகளை நினைக்கும்போது மனம் துடிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். எந்த ஒரு போரிலும் இந்தியா நடுநடுலையை கடைபிடிப்பது கிடையாது எனக்கூறிய பிரதமர் மோடி, இந்தியா எப்பொழுதும் அமைதியின் பக்கம் நிற்பதாக கூறினார். 

இதற்கு மறுமுனையில் இருந்து பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு துணையாக இந்தியா நிற்க வேண்டும் எனவும், சமநிலையை கடைபிடிக்க வேண்டாம் என தான் விரும்புவதாக கூறினார். இந்தியா மிகப்பெரும் நாடு எனக்கூறிய ஜெலன்ஸ்கி, தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அவர்களுடனான பொருளாதாரத்தை நிறுத்தலாம் எனக்கூறினார். இதன்பின்னர் மருத்துவம், வேளாண்மை, கலாச்சாரம் தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

Night
Day