உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவை எதிர்க்கும் உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோன் வலியுறுத்தி உள்ளார்.  ஆதரவு அளிக்கும் நாடுகள் கோழைகள் அல்ல என உறுதியாக உலகிற்கு தெரிவிக்க வேண்டிய தருணம் நெருங்கி வருவதாகவும் நமக்கான போரை, நடப்பது நடக்கட்டும் என கண்டும் காணாமல் இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் உக்ரைனில் மேற்குலக நாடுகளின் படைகளை களமிறக்க வேண்டிய அவசியம் வந்தால் கண்டிப்பாக அதை செய்வோம் என முன்பே கூறியதாக தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றாலும் உக்ரைனில் நிலைமை சீரடைவதையே மேற்குலகம் விரும்புவதாகவும் மேக்ரோன் கூறியுள்ளார்.

Night
Day