உக்ரைனுக்கு மேலும் ரூ.8,365 கோடி ஆயுத உதவி - அமெரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு மேலும் 8 ஆயிரத்து 365 கோடி ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.


ரஷ்யா  உக்ரைன் போர் 2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. இதில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்‍கா இதுவரை 5.37 லட்சம் கோடி ரூபாய்க்‍கும் அதிகமான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் உக்ரைனின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் விதமாக மேலும் 8 ஆயிரத்து 365 கோடி ரூபாய் நிதியை பைடன் நிர்வாகம் விடுவித்துள்ளது.
 

Night
Day