உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

3 ஆண்டுகால உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி அரேபியாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள டொனால்ட் டிரம்ப், சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அதற்கு ரஷ்ய அதிபர் புடின் ஒப்புக்கொள்வார் என நம்புவதாகவும் கூறினார். 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

Night
Day