உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்த கருத்து : மனித உரிமை ஆர்வலருக்‍கு சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து கருத்து தெரிவித்த மனித உரிமை ஆர்வலருக்கு மாஸ்கோ நீதிமன்றம் இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

மனித உரிமைகள் குழ நினைவகத்தின் இணைத்தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மனித உரிமை ஆர்வலர் ஒலெக் ஓர்லோவ் . 70 வயதான இவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் ரஷ்ய ராணுவம் குறித்தும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்தும் விமர்சித்து இருந்தார். அதில் ரஷ்ய ராணுவத்தை இழிவுப்படுத்தி எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ஒலெக் ஓர்லோவ்வுக்கு 30 மாத சிறை தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. உக்ரைன்  ரஷ்யா போர் தொடங்கி கடந்த 24ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day