உக்‍ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் எதிரொலி : பாதுகாப்புப் படை தலைவர் தி செர்கி ரூத் அதிரடி நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தன்னை கொலை செய்ய சதி திட்டமிட்டது தொடர்பாக தனது பாதுகாப்பு படை தலைவராக இருந்த செர்கி ரூத் என்பவரை உக்‍ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடியாக நீக்‍கியுள்ளார்.

முன்னதாக  ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காக உளவுப்பிரிவில் கர்னல் பதவி வகித்து வந்த 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்து விடுமாறு ரஷ்யா உத்தரவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தனது பாதுகாப்பு படை தலைவராக இருந்த செர்கி ரூத் என்பவரை ஜெலன்ஸ்கி அதிரடியாக நீக்‍கியுள்ளார்.

Night
Day