உக்‍ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளாக நடைபெறும் போர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்‍ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்‍கு கொண்டு வர இந்தியா உதவ வேண்டும் என சுவிட்சர்லாந்து கேட்டுக்‍கொண்டுள்ளது. உக்‍ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்‍கு இந்தியா உதவ முன்வர வேண்டுமென்று உக்‍ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த ஜனவரி மாதம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில், உக்‍ரைன், ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்‍கு கொண்டு வர சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 15, 16 தேதிகளில் அமைதி உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்‍கிறது. இதில் கலந்து கொண்டு இரு நாடுகளிடையே அமைதி நிலவ தேவையான நடவடிக்‍கை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும் என சுவிட்சர்லாந்து கேட்டுக்‍கொண்டுள்ளது.

Night
Day