உக்‍ரைன் வெற்றி பெறும் வரை கைவிடமாட்டோம் : ஜோபைடன் உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் வரை அந்நாட்டை கைவிட மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், முழு அளவில் போர் நடக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை என்று தெரிவித்தார். இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெறும் தாக்‍குதல் குறித்து பேசிய அவர், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் அமைதி ஒப்பந்தத்திற்கு விதிகளை வகுத்து காசாவில் அமைதியை ஏற்படுத்துவதுடன், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டார். புதின் நடத்தி வரும் போர், தோல்வியைச் சந்தித்து உள்ளதாகவும், உக்ரைன் இன்னும் சுதந்திரமாக உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் உக்ரைன் வெல்லும் வரை, அந்நாட்டை கைவிட மாட்டோம் என்று 
அமெரிக்‍க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்தார்.

Night
Day