உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 1,301-ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடும் வெப்பம் காரணமாக சவுதி அரேபியாவில் உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 300ஐ தாண்டியுள்ளது. இஸ்லாமியர்கள் தங்களது வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதும் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு செல்வது வழக்கம். இந்தாண்டு, கடந்த 14ம் தேதி இந்த புனித யாத்திரை துவங்கியது. இந்நிலையில், அங்கு நிலவும் கடும் வெப்பத்தால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 301 ஹஜ் பயணியர் இறந்தது தெரிய வந்துள்ளது. இதில், அதிகபட்சமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் பலியாகினர்.இந்திய நாட்டை சேர்ந்த 98 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹஜ் யாத்திரை வந்தவர்களில் முறையாக பதிவு செய்யப்படாமல் வந்த பலர் மாயமாகி உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Night
Day