உலகின் அதிவேக ரோலர்கோஸ்டர் நிரந்தரமாக நிறுத்தம் - Fuji-Q Highland அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் விபத்து காரணமாக ஜப்பானின் டோ-டோடோன்பா அதிவேக ரோலர்கோஸ்டர் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Fuji-Q Highland Theme Park-ல் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரோலர்கோஸ்டர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக கோஸ்டர் ஆகும். 2020-21-ம் ஆண்டுகளில் இதில் பயணித்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டு கடுமையான எலும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டதால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் விபத்து அபாயத்தை முற்றிலுமாக அகற்றும் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்வது கடினம் எனத் தெரிய வந்ததால் டோ-டோடோன்பா ரோலர் கோஸ்டரின் செயல்பாட்டை நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Night
Day