உலகின் மிகப்பெரிய விற்பனையாளர் உக்‍ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - ட்ரம்ப் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்புவதாகவும், அவர் உலகின் மிகப்பெரிய விற்பனையாளராக திகழ்வதாக குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில்,  ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகவே ஜெலன்ஸ்கி நடந்து கொள்வதாக தெரிவித்தார்.

உலக வரலாற்றில் மிகப்பெரிய விற்பனையாளராக ஜெலன்ஸ்கி இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் அவர் அமெரிக்கா வரும்போது 5 ஆயிரத்து 16 கோடி ரூபாய்களை எடுத்து செல்வதாக ட்ரம்ப் குறிப்பிட்டார். உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவி மூலம் ஜெலன்ஸ்கி பலனடைந்து வருகிறார். இவ்வாறு நிதியுதவியை பெற்று வருவதால் தான் அவர் ஜனநாயக கட்சியினரை விரும்புவதாக ட்ரம்ப் பேசினார்.

Night
Day