உலகின் வலிமையான கரன்சிகள் பட்டியலில் குவைத் தினார் முதலிடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் வலிமையான கரன்சிகள் பட்டியலில் குவைத் தினார் முதலிடம் பிடித்துள்ளது. உலக நாணய நிதியம் வெளியிட்டுள்ள வலிமையான கரன்சிகள் பட்டியலில் இந்திய ரூபாய்க்கு 15வது இடம் கிடைத்துள்ளது. கரன்சியின் வலிமையை பொருத்தே, ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும் நிலையில், கரன்சி மதிப்பு சரியும் போது, பொருளாதாரம், அன்னிய முதலீடு ஆகியவையும் பாதிப்பை சந்திக்கும். அந்த வகையில் உலக நாணய நிதியத்தின் தரவுகள் படி, குவைத் தினார் முதலிடத்தையும், பஹ்ரைன் தினார் 2வது இடத்தையும், ஓமன் ரியால் 3வது இடத்தையும், ஜோர்டான் தினார் 4வது இடத்தையும், ஜிப்ரால்டர் பவுண்டு 5வது இடத்தையும், பிரிட்டிஷ் பவுண்டு 6வது இடத்தையும், கேமன் தீவுகளின் டாலர் 7 வது இடத்தையும், சுவிட்சர்லாந்து பிராங்க், 8 வது இடத்தையும், யூரோ 9 வது இடத்தையும், அமெரிக்க டாலர் 10 வது இடத்தையும் பிடித்துள்ளது. 

Night
Day