உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள XEC கொரோனா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

XEC என அழைக்கப்படும் புதிய வகை கொரோனாத் தொற்று 27 நாடுகளில் பரவியுள்ளதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  2019-ம் ஆண்டில் பரவத் தொடங்கி ஒரு கோடி பேருக்கும் மேல் உயிரிழப்புகளை ஏற்படுத்திய கொரோனா, பல்வேறு மரபுத் திரிமாற்றத்தால் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக XEC  என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்கத் தொடங்கி உள்ளது. முதலில் ஜெர்மனியில் தொடங்கிய இந்த வகைத் தொற்று இப்போது இங்கிலாந்து, டென்மார்க், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில்  பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 3 கண்டங்களில் 27 நாடுகளில் பரவி உள்ள இது, மற்ற நாடுகளுக்கு மேலும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day