ஊழியரை காலணியால் சரமாரியாக தாக்கிய பாக். பின்னணி பாடகர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் பாடகர் ஒருவர் தனது ஊழியரை காலணியால் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த பின்னணி பாடகரான ரஹத் ஃபதே அலிகானுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல பாலிவுட் படங்களில் பாடியுள்ள இவர், பாகிஸ்தானில் வெளிவரும் தொடர் நாடகங்களிலும் பின்னணி இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், அவரது வீட்டில் பணிபுரியும் நபரை ரஹத் ஃபதே அலிகான் காலணியால் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Night
Day