எச்-1 பி விசா பெற புதிய விதிமுறைகளை கொண்டுவந்த அமெரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் எச்-1பி விசா பெறும் தேர்வுக்கான புதிய விதிமுறைகள் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. H-1B விசாக்களை பதிவு செய்வதில் ஏற்படும் பல்வேறு வித மோசடி அபாயங்களை குறைக்கவும், தேர்வு செய்வதற்கான சம வாய்ப்புகளை உறுதி செய்யவும் இந்த விதிமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதன்படி பயனாளிகள் சமர்பிக்கும் சான்றிதழ்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு இருக்காது எனவும், பயனாளிகளின் தனிப்பட்ட பயன்களை கருத்தில் கொண்டு தேர்வுசெய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகள் மூலம், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள், அமெரிக்காவில் இருந்தபடியே தங்களின் காலாவதியான விசாக்களை புதுப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day