எமிரேட்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி எடுத்து செல்லத் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளில் வெடிபொருளை மறைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, எமிரேட்ஸ் விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவற்றை எடுத்து சென்றால் பறிமுதல் செய்வதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Night
Day