ஏடன் வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏடன் வளைகுடாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் கடலில் தத்தளித்த 21 கப்பல் பணியாளர்களை, இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். பார்படாஸ் கொடியேற்றப்பட்ட சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை வீசினர். இதில் அந்த கப்பல் பலத்த சேதம் அடைந்து தீப்பிடித்தது. இதையடுத்து உயிர்பிழைக்க எண்ணிய இந்தியர் உள்ளிட்ட 21 கப்பல் பணியாளர்கள் கடலில் குதித்தனர். இதனைக் கண்ட ஐ.என்.எஸ் கொல்கத்தா போர்க்கப்பலில் பணியில் இருந்த இந்திய கடற்படையினர், கடலில் தத்தளித்த 21 கப்பல் பணியாளர்களை ஹெலிகாப்டர், படகுகள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு இந்திய கடற்படையின் மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சையும்  வழங்கப்பட்டது. 

varient
Night
Day