ஏப்ரல் 8-ம் தேதி ஏற்படவுள்ள அரியவகை முழு சூரிய கிரகணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 8ம் தேதி ஏற்படவுள்ள முழு சூரிய கிரகணத்தின்போது, சூரிய குடும்பத்தில் உள்ள 4 கோள்கள் மற்றும் வால் நட்சத்திரத்தை வானில் காணமுடியும் என வானிலை ஆய்வாளர்ககள் தெரிவித்துள்ளனர். 2024ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், வரும் ஏப்ரல் 8ம் தேதி ஏற்படவுள்ளது. அரியவகை சூரிய கிரகணமாக கருதப்படும் இந்த நிகழ்வின்போது, சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், வெள்ளி உள்ளிட்ட 4 கோள்களையும், 71 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் வால் நட்சத்திரத்தையும் காண முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 1979-க்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணம் தென்பட உள்ளதால் லட்சக்கணக்காக மக்கள் அங்கு குவிய வாப்புள்ள நிலையில், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Night
Day