கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல என ஜெர்மன் அரசு சட்டத்திருத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல என ஜெர்மன் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஒரு தனி நபர் அதிகபட்சமாக 25 கிராம் கஞ்சாவை தன்னுடன் எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தனிநபர் தன் வீட்டில் அதிகபட்சமாக, 3 கஞ்சா செடிகளை வளர்க்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் ஏராளமானோர் ஒன்று திரண்டு, பெர்லினில் உள்ள ’பிராண்டன்பர்க் கேட்டில்’ கஞ்சா புகைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

varient
Night
Day