கனடாவில் கேளிக்‍கை விடுதியில் துப்பாக்‍கிச்சூடு - 12 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனடாவில் கேளிக்கை விடுதி ஒன்றில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கிழக்‍கு டொராண்டோவில் ஸ்கார்போரோ என்னும் நகரில் கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நுழைந்த மர்மநபர், திடீரென தாம் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக அங்கிருந்தவர்களை நோக்‍கி சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் கேளிக்கை விடுதியில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். தகவலறிந்த காவல்துறையினர், தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

varient
Night
Day