கனடாவில் துப்பாக்கிச்சூடு - இந்திய மாணவி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். 

இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவா கனடாவின் ஹாமில்டனில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ஹாமில்டனில் உள்ள சவுத் பெண் எனும் இடத்தில் இரு கும்பல்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அப்போது தவறுதலாக அந்த பகுதியில் பேருந்திற்காக காத்திருந்தபோது தவறுதலாக பாய்ந்து வந்த புல்லட் ஹர்சிம்ரத்தின் மார்பு மீது பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து இந்திய தூதரகம், இந்திய மாணவி உயிரிழப்பு வருத்தமளிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக ஹாமில்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. 

Night
Day