கனடாவில் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பனிப்புயல் காரணமாக கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கனடாவின் பல்வேறு பகுதிகளில் குளிர்கால புயல் மற்றும் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் பனிப்புயல் மற்றும் அதிக பனிப்பொழிவால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குறிப்பாக ஹாலிஃபாக்ஸில் 30 சென்டி மீட்டருக்கு மேல் பனிப்பொழிந்துள்ளதால் பேருந்து மற்றும் படகு சேவைகள் நிறுத்தப்பட்டன. சாலை முழுவதும் பனி குவியலாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

Night
Day