உலகம்
கயானா சென்றார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
கனடாவில் 137 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 இந்தியர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள வங்கி ஒன்றில் கனடாவின் ரொன்றோவுக்கு 2 பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன்மீது, பணம் மற்றும் தங்கக்கட்டிகள் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பார்சல்கள் ரொன்றோவில் உள்ள சேமிப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஒருவர் போலியான ஆவணங்களை காட்டி அந்த பார்சல்களை எடுத்து சென்றுள்ளார். அதன்பிறகு இரவில் பார்சல்களை பெற்று கொள்ள சிலர் வந்துள்ளனர். அவர்கள் பார்சல்களுக்கான ஆவணங்களை கொடுத்த போதுதான் ஏற்கனவே எடுத்து சென்றது மோசடி நபர் என தெரியவந்தது. இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட 2 இந்தியர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த பார்சலில் 137 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இருந்தது குறிப்பிடதக்கது.
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...