கமலா ஹாரிசுக்கு ஆதரவாக இசையமைச்சாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீசுக்கு ஆதரவாக இந்திய திரையுலகின் முன்னணி இசையமைச்சாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் டெனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் போட்டியிடும் நிலையில், இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா வாழ் தெற்காசிய மக்களின் ஓட்டுகளை குறி வைக்கும் விதமாக கமலா ஹாரிசுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இடம், நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day