கயானா சென்றார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நைஜீரியா, பிரேசில் பயணத்தை தொடர்ந்து, 2 நாட்கள் பயணமாக கயானா சென்ற பிரதமர் மோடியை, ஜார்ஜ்டவுண் விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் வழங்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து தாம் தங்கும் ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை, கயானா அதிபர் மற்றும் பார்படாஸ், கிரினடா பிரதமர்களும் வரவேற்றனர். இந்த பயணத்தின்போது கயானா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் 56 ஆண்டுகளுக்கு பின்னர் கயானா நாட்டுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்ககது. 

Night
Day