கருக்கலைப்பு, கருணை கொலை மனித குலத்திற்கு எதிரானது : வாடிகன் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலின மாற்றும் அறுவை சிகிச்சை, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையால் மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், கருக்கலைப்பு, கருணை கொலையும் மனித குலத்திற்கு எதிரானது என வாடிகன் அறிவித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டு போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் மனித குல கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட இந்த அறிவிப்பை வாடிகனின் கோட்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆணையும் பெண்ணையும் கடவுள் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார். அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது ஒரு நபரின் பாலினத்தை மாற்ற முயற்சிப்பது, கருத்தரித்த தருணத்திலிருந்து அவர் பெற்ற தனித்துவமான கண்ணியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உள்ளது' என வாடிகன் அறிவிக்‍கையில் தெரிவித்துள்ளது.

Night
Day