காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தி உள்ளார். காசா போரில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உள்ளதாக கூறிய மெக்ரான், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார். 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரஃபா நகரில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அங்கு தாக்குதல் நடத்தினால் அதிகமான உயிர்ப்பலிகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளன. 

Night
Day