காசாவில் போர் நிறுத்தம் - ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசாவில் உடனடியாக போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என முதன்முறையாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முன்னதாக 4 முறை கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.   இத்தீர்மானத்தின்படி, ஹமாஸிடம் உள்ள பணயக் கைதிகள் விடுவிக்கப்ப வேண்டும். இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். அதனால் தீர்மானம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே தீர்மானம் நிறைவேற்றலைத் தொடர்ந்து, அமெரிக்கா செல்லவிருந்த தூதுக் குழுவின் பயணம் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

Night
Day