காசா பகுதியில் 6.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசா பகுதியில் ஆறரை லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஐக்கிய நாடுகள் சபை துவக்கியுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 11 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காசாவில் முதல்முறையாக போலியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த ஐக்கிய நாடுகள் சபை, அங்குள்ள குழந்தைகளுக்கு உடனடியாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் மனிதநேய நடவடிக்கையாக தற்காலிகமாக போரை நிறுத்த ஒப்புக் கொண்டதை அடுத்து, காசாவில் ஆறரை லட்சம் குழந்தைகளுக்கு 3 கட்டங்களாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் முகாம் ஞாயிற்றுக் கிழமை துவங்கியது. வரும் 9ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

Night
Day